X

அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் திறப்பு விழா – கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ”கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வெளியிட்டு, அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது ‘கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை’!” என பதிவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.

மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழை வெளியிட்டு இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.

Tags: tamil news