கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி – ராஷி கண்ணா நடிப்பில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான அடங்கமறு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் ஜெயம் ரவி நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் தொல்லையை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது.
முன்னதாக சென்னையில் நேற்று அடங்கமறு படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அடங்கமறு இயக்குநர் கார்த்திக் தங்கவேல் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியானது. கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் தேவ் படத்தை தயாரித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் அடுத்ததாக தயாரிக்கும் படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் ஒரு படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது. இந்த இரு படங்களில் ஒரு படத்தில் சூர்யா அல்லது கார்த்தி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் தவிர்ந்து பி.எஸ்.மித்ரன் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.