Tamilசினிமா

அஞ்சலியுடன் ரொமான்ஸ் செய்யும் யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் நயன்தாராவுடன் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அவரை தொடர்ந்து பிரபல நடிகையான அஞ்சலியுடன் ரொமன்ஸ் செய்ய இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘பூச்சாண்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘தி சோல்ஜர்ஸ் ஃபேக்டரி’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பேண்டஸி காமெடி கலந்த படத்தில் காமெடி நடிகர் யோகிபாபுவுடன் ராமர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழு நீள கதாபாத்திரத்தில், அஞ்சலியுடன் ஒருதலை காதலில் ஈடுபடும் ரோட்சைட் ரோமியோக்களாக அவர்கள் நடிக்கிறார்கள்.

தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.