அஜித் பட பாடல் படைத்த புதிய சாதனை!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்துடன் வெளியானது. தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இதில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. இந்தப் பாடலை வைத்து டிக்-டாக் செய்து வெளியிடும் தம்பதியினரும் இருக்கிறார்கள்.

இந்தப் படம் வெளியாகி ஓராண்டைக் கடந்துவிட்டாலும், இப்போது ‘விஸ்வாசம்’ பாடல்கள் மற்றுமொரு சாதனையைப் புரிந்துள்ளது. ஆடியோ வடிவில் இந்தப் பாடல் 500 மில்லியன் ஸ்ட்ரீம்களை கடந்துள்ளது. வீடியோக்களை பார்வைகளாகக் கணக்கிடுவது போல், ஆடியோ கேட்பதை ஸ்ட்ரீமிங் என்று சொல்வார்கள். அந்த வகையில் ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்கள் இதுவரை 50 கோடி முறை கேட்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools