X

அஜித் படத்தின் கதையில் மாற்றம்!

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பிங்க் கதையை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.

படம் அஜித் பிறந்தநாளான மே1-ந் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ரிலீஸை தள்ளிவைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட வேகமாக சென்றாலும், விஸ்வாசம் படத்திற்கு இப்போது வரை, வார இறுதி நாட்களில் திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருக்கிறது.

இதனால் மே 1-ந் தேதி வெளியீட்டுக்கு பதிலாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.