X

அஜித் சாருக்கு விருது நிச்சயம்! – பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நம்பிக்கை

’களவாணி 2’ படம் ரிலீஸுக்கு பிறகு கோடம்பாக்கத்தில் பரவலாக அடிபடும் பெயர் ‘பப்ளிக் ஸ்டார்’. வில்லனாக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், தற்போது பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறார். இதில் முன்னணி இயக்குநர்களின் படங்களும் அடங்கும்.

இந்த நிலையில், நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பாத்திருக்கிறார்.

உலகம் முழுவதும் நேற்று வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அஜித் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். சினிமா பிரபலங்களும் படம் பார்த்து பாராட்டி வருகிறார்கள். அஜித்தின் வித்தியாசமான நடிப்பில், உருவாகியுள்ள இப்படத்தை ‘களவாணி 2’ வில்லன் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், முதல் நாள், முதல் காட்சியில் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கிறார். ’

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, ”மற்றவர்களுக்கு எப்படி அஜித்தை பிடிக்குமோ அதுபோல் எனக்கும் அவரை பிடிக்கும். அவரை மட்டும் அல்ல, ரஜினி, கமல், விஜய், சூர்யா என்று அனைத்து ஹீரோக்களின் படங்களையும் நான் முதல் நாளே பார்த்துவிடுவேன். அப்படி தான் அஜித் சார் படத்தையும் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தேன்.

அஜித் சார், இதுவரை நடித்த படங்களில் ரொம்பவே வித்தியாசமான முயற்சி. அவர் நீதிமன்ற காட்சிகளில் நடித்தது இயல்பாக இருக்கிறது. நிச்சயம் அவரது நடிப்புக்கு நிச்சயம் விருது கிடைக்கும். படம் இளைஞர்களிடம் மட்டும் இன்றி பெண்களிடமும் வரவேற்பு பெறும்.” என்றார்.

அஜித்தின் நீதிமன்ற காட்சிகள் குறித்து பாராட்டும் நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.