அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் `விஸ்வாசம்‘. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, ரோபோ சங்கர், `ஓகே ஓகே’ மதுமிதா, கலைராணி என பலர் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு தளங்களில் நடந்த சுவாரசியங்களைப் பற்றி நடிகை மதுமிதா கூறும்போது படப்பிடிப்பில் நான் அஜித்திடம் சமையல் பற்றி அதிகமாக பேசுவேன். அவரும் எங்ககிட்ட ரொம்ப ஜாலியா பேசுவார். சமீபகாலமாக ‘மீடூ’ விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதைப் பற்றிச் சில மாதங்களுக்கு முன்னாடியே அஜித் எங்ககிட்டச் சொன்னார். `ஹாலிவுட்டில் மீடூனு ஒரு விஷயம் இருக்கு. அது தமிழ் சினிமாவிலும் நடந்தால், நிறைய பாலியல் பிரச்சினைகள் குறையும்’ன்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரி இப்போ நடந்திருக்கு’’ என்று கூறி இருக்கிறார். #Viswasam #AjithKumar