குற்றால ரமேஷ் என்கிற குற்றாலீஸ்வரன் இந்தியா சார்பாக சர்வதேச அளவில் பல நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர். 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.
தற்போது நடிகர் அஜித்குமாரை சந்தித்துள்ள குற்றாலீஸ்வரன், “தலயுடன் நம்பமுடியாத ஒரு மாலை. நான் உங்கள் பெரிய ரசிகன் என்று தல சொல்லும் போது, இந்த மனிதனின் எளிமை என்னை அசரடித்துவிட்டது. விளையாட்டு மேம்பாடு சம்பந்தமாக சில முன்னெடுப்புகள் குறித்து ஆலோசித்திருக்கிறோம்“ என்று குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
இதனால், அஜித்குமார் குற்றாலீஸ்வரனுடன் இணைந்து விளையாட்டுத்துறை சம்பந்தமாக ஏதோ பயிற்சி மையம் அல்லது திட்டத்தைத் தொடங்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.