அஜித்தை கலாய்த்த யோகி பாபு!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகிவிட்டார் யோகி பாபு. ஒரே நேரத்தில் விஜய், அஜித் இருவருடனும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அது பற்றி கூறும்போது “இவங்க ரெண்டுபேருமே எனக்கு ஒன்றுதான். பிரித்துப்பார்க்கப் பிடிக்கலை. இரண்டு பேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன நடிகர். ஆனால் இரண்டு பேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வைத்து அழகு பார்த்தார்கள்.

விஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்த்து ஏதாவது வசனம் பேசினால் அதை மனசார ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்த்து ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே… பேசட்டுமா?’ன்னு தயங்கிக் கேட்டேன்.

அதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க… இது உங்க வேலை. பேசுங்க’ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்கு தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு”என்று கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools