அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வித்யா பாலன்!
`விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்த படத்தில் 3 கதாநாயகிகளில் ஒரு கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மற்ற இரு கதாபாத்திரங்களுக்கு ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கல்யாணி பிரியதர்ஷனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் தேசிய விருது வென்ற நடிகை வித்யா பாலனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதை போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் பதிப்புக்கு ஏற்ப எச்.வினோத் திரைக்கதையை மாற்றி அமைத்திருப்பதால், வித்யா பாலனுக்கு முக்கிய வேடம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.