X

அஜித்துக்கு ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின்
பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகியாக
ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை தபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்குமுன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.