X

அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக இது தயாராகி வருகிறது. 60 சதவீத படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு கடந்த 6 மாதமாக தடைபட்டது.

படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் தொடங்கி உள்ளது. ஆனால் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்க வில்லை. இதர நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வில்லன் நடிகர் கார்த்திகேயா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வலிமை படப்பிடிப்பிற்காக பெங்களூருவில் இருந்து கார்த்திகேயா சென்னை வந்துள்ளார். அவர் சென்னை விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படங்களும், வலிமை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.