அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
விஸ்வாசம் படத்தை அடுத்து, அஜித் தற்போது போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது. இதில் வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளை படக்குழுவினர் தொடங்க இருக்கிறார்கள். மேலும் இப்படத்தின் 2வது லுக் போஸ்டரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருக்கிறது.