அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பொங்கல் விருந்தாக 2025 ஆம் ஆண்டு வெளியாகிறது
விடாமுயற்சி படத்தைத் தாண்டி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடையே தொற்றியுள்ளது. சமீபத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலானது.
குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் மூன்று முக பாவனையை கொடுத்தபடியுள்ளார். ஒன்று சாந்தமாகவும், ஒன்று சிரித்துக்கொண்டும் மற்றொன்று கோவமாக முக பாவனையில் காணப்பட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் 2-வது லுக் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தை மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். குட் பேட் அக்லி படம் 2025-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.