நடிகர் அஜித் ரசிகர்களில் சிலர் தமிழிசை சவுந்தராஜன் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த செய்தி பரவியது.
இந்த செய்திக்காக தனது அரசியல் நிலைபாடு பற்றி அஜித் நீண்ட அறிக்கையை வெளியிட்டார். ‘அரசியலில் தனிப்பட்ட கருத்துகள், விருப்பு வெறுப்புகள் உண்டு. ரசிகர்கள் அவரவர் விருப்பப்படி அரசியலில் ஈடுபடலாம். ஆனால் அதில் என் பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தாதீர்கள். எந்த சமயத்திலும் அரசியல் பற்றி சினிமாவில் கூட நான் எதுவும் பேசியதில்லை’ என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘அஜித் சிறந்த நடிகர். அவருடைய அரசியல் பற்றிய கருத்துக்கு நன்றி. அரசியலுக்கு வரமாட்டேன் என்று அஜித் சொல்லியிருப்பது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு’ என்று கூறினார்.