பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, நடிகர் மகத் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன், தன் நண்பர் சிம்பு நடிக்கும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்தார்.
பிரபு ராம் இயக்கத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் ரொமான்டிக் காமெடி ஜானரில் ஒரு படம், யாஷிகா ஆனந்துடன் ஹாரர் திரில்லர் ஜானரில் ஒரு படம் என மகத் மிகவும் பிசியாகிவிட்டார்.
இது குறித்து மகத்திடம் கேட்ட போது, “ரொம்ப பயமா இருக்கு. அடுத்தடுத்து படங்கள் பண்றேன். என்ன நடக்குதுனே புரியலை. நான் என் பெஸ்டை கொடுக்கிறேன். அதுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தால் ரொம்ப சந்தோசமா இருக்கும்“ என்றார் மகிழ்ச்சியுடன்.