இந்திய ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 4 ஏவுகணையை நேற்றூ வெற்றிகரமாக பரிசோதனை செய்தது. ஒரு டன் அணு ஆயுதங்களை ஏந்திச்சென்று 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கவல்லது அக்னி-4 ஏவுகணை.
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத் தாக்கியது என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.