Tamilசினிமா

அக்டோபர் 14 ஆம் தேதி அரண்மனை 3 ரிலீஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தின் 2 பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்தது. தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. இப்படத்தையும் சுந்தர்.சி தான் இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.