அக்டோபர் மாதத்திற்காக திருப்பதி ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசனம் டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

இதனால் இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே பிரமோற்சவ விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் உட்பட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அக்டோபர் 1-ம்தேதி முதல் 5-ந்தேதி வரை ரூ.300 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது.

எனவே தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழியில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதியில் நேற்று 72,851 பேர் தரிசனம் செய்தனர். 34,404 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர் ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools