X

அகில இந்திய ஹாக்கி தொடர் – சி.ஏ.ஜி, இந்திய ராணுவ அணிகள் இன்று மோதல்

94-வது எம்.சி.சி- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 5-வது நாள் போட்டிகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.) அணி 4-3 என்ற கோல் கணக்கில் கர்நாட காவையும், பஞ்சாப் நேஷனல் வங்கி 1-0 என்ற கணக்கில் இந்திய விமானப் படையையும் தோற்கடித்தன.

இன்று மாலை 4.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் சி.ஏ.ஜி. (தணிக்கை துறை அலுவலகம்) அணிகள் மோதுகின்றன. சி.ஏ.ஜி. அணி தொடக்க ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் தமிழகத்துடன் டிரா செய்தது. 2-வது போட்டியில் 6-2 என்ற கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியையும், 3-வது ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் இந்திய விமானப்படையை தோற்கடித்தது. அந்த அணி இந்திய ராணுவத்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

இந்திய ராணுவ அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் இந்திய கடற்படை மத்திய தலைமை செயலக அணிகள் மோதுகின்றன. இந்திய கடற்படை அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது. மத்திய தலைமை செயலக அணியும் முதல் 2 போட்டியில் தோற்று இருந்தது. அந்த அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

Tags: tamil sports