Tamilசினிமா

ஷங்கருக்கு பிடித்த இசையமைப்பாளர் இளையராஜாவாம்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், தனது முதல் படமான ‘ஜெண்டிமேன்’ முதல் தற்போது இயக்கிய ‘2.0’ வரை பெரும்பாலான படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானை தான் இசையமைப்பாளாராக போட்டிருக்கிறார். சில படங்களில் ஹாரிஸ் ஜெயராஜுடன் பணியாற்றியுள்ளார்.

அதேபோல், தான் தயாரித்த சொந்த படங்களிலும் அப்படங்களின் இயக்குநர்களின் விருப்பத்திற்கு ஏற்க இசையமைப்பாளர்களை நியமனம் செய்தார். அப்படி இருந்தும், ஷங்கர் இயக்கிய அல்லது தயாரித்த எந்த ஒரு படத்திலும் இளையராஜா பணியாற்றவில்லை. அப்படி இருந்தாலும், ஷங்கருக்கு பிடித்த இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தானாம்.

இது குறித்து டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் ஷங்கர், தான் எப்போதும் இளையராஜாவின் பாடல்களை தான் கேட்பேன், அவரது இசை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும், என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *