வைரலாகும் ‘மைக்கேல்’ திரைப்பட டிரைலர்

புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘மைக்கேல்’. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. ‘மைக்கேல்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ‘மைக்கேல்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதனை நந்தமுரி பாலகிருஷ்ணா, ஜெயம் ரவி, அனிருத் ரவிச்சந்தர், நிவின்பாலி ஆகியோர் இணைந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டிரைலரை வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.