வைரலாகும் காமெடி நடிகர் சூரியின் புதிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்.

மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் “பரோட்டா சூரி” கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான “பரோட்டா காமெடி” இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இவ்வாறு சூரியின் திரைவாழ்க்கையில் முதல் திருப்புமுனை அமைந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.

அதன்பின் ரஜினிமுருகன், தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் இவரின் காமெடி கதாபாத்திரங்கள் அதிகம் பேசப்பட்டது. முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்து இருக்கிறார். தற்போது ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்திலும், சூர்யாவுடன் இணைந்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்து இருக்கும் சூரி, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிறந்தநாளை முன்னிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெண்ணிலா கபடிகுழு படத்தில் சூரி பேசும் வசனமான ‘எல்லா கோட்டையும் அழிங்க… முதல்ல இருந்து ஆடுவோம்..!’ என்று தொடங்கும் அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.