வைரலாகும் ‘அக்னி சிறகுகள்’ பட டீசர்

விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்‌ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மூடர்கூடம் நவீன் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது.

இந்நிலையில் ‘அக்னிக் சிறகுகள்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள ‘அக்னிக் சிறகுகள்’ படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.