வேளாண் மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – கேரள முதலமைச்சர் அறிவிப்பு

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்றத்தில் வேளாண் மசோதாவை எதிர்த்த 8 எம்.பி.க்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த மசோதா அமலுக்கு வந்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கடந்த 6 ஆண்டுகளில் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 10,281 விவசாயிகள் இறந்துள்ளனர்.

வேளாண் மசோதா குறித்து மந்திரி சபை கூட்டத்தில் விவாதித்தோம். இது குறித்து சட்டநிபுணர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.

அதன்அடிப்படையில் வேளாண் மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவது பற்றி முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.