வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்தியா சாம்பியன்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப்ஸ்பெயினில் நடந்தது. இந்திய அணியில் ஒரே மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காட்ரெல், ஒஷானே தாமஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கீமோ பால், பாபியன் ஆலென் இடம் பெற்றனர்.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி கிறிஸ் கெய்லும், இவின் லீவிசும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். 2-வது ஓவரிலேயே மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

22 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியில் ஆட்டத்திற்கான ஓவர் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய ஹெட்மயர், ஷாய் ஹோப் ஜோடி ரன்களை வெகுவாக குவிக்க தொடங்கினர். ஆனால் ஆட்டத்தின் 24.5 வது ஓவரில் சமி வீசிய பந்தில் ஹெட்மயர் 25 (32) ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து இறங்கிய நிக்கோலஸ் பூரன், ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க தொடங்கினார். நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களாக விளாசி தள்ளி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தினார். ஆனால் இந்த ஜோடியின் ஷாய் ஹோப் 24 (52) விக்கெட்டை இந்திய அணி வீரர் ஜடேஜா பிரித்தார். அவரை தொடர்ந்து ஜேசன் ஹோல்டர் களம் இறங்க ஆட்டத்தின் 30.1வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் 16 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதன் பின் தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர். தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஜேசன் ஹோல்டர் 14 (20), கார்லோஸ் பிராத்வைட் 16 (14) ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தனார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 240 ரன்களை எடுத்தது. இறுதியில் பாபியன் ஆலென் 6(7) ரன்னும், கீமோ பால் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும், சாஹல், ஜடேஜா இருவரும் தலா ஒரு விக்கெட்களை எடுத்தனர்.

இதன்மூலம் 241 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் ஆட்டம் சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இந்நிலையில் ஆட்டத்தின் 2.4வது ஓவரில் ரோகித் சர்மா 10 (6) எதிர்பாராத விதமாக ரன்அவுட் ஆனார், அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களம் இறங்கினார். தவான் மற்றும் விராட் கோலி இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை குவிக்க துவங்கினர். இவர்களின் ஜோடியை பிரிக்க நினைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஃபேபியன் ஆலன் தனது பந்து வீச்சில் ஆட்டத்தின் 12.2 ஓவரில் தவானின் 36 (36) விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பந்த் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய 92 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதன்பின் கோலியுடன் ஜோடி சேர்ந்து விளையாட இந்திய அணி வீரர் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கினார். இவர்கள் இருவரும் இணைந்து ரன்களை வெகுவாக குவிக்க துவங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் இருவரும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்டுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் 41 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர், 3 பவுண்டரிகள் விளாசி 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோச் வீசிய பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் கேதர் ஜாதவ் களம் இறங்க ஆட்டம் தொடர்ந்து வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கியது.

அதிரடி ஆட்டத்தை அணியின் கேப்டன் விராட் கோலி 30 வது ஓவரில் தனது சதத்தை பூர்த்தி செய்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 32.3 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் கேப்டன் கோலி 99 பந்துகளை சந்தித்து 114 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஃபேபியன் ஆலன் 2 விக்கெட்களையும், கெமர் ரோச் 1 விக்கெட்களை வீழ்த்தினர்.,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேரடி ஒரு நாள் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 9 தொடர்களை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது இந்திய அணிக்கு பெறுமை சேர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *