வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் – இந்திய அணியில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீசை 3- 0 என வென்று ஒயிட்வாஷ் செய்தது.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.