வெள்ளி மயில் படம் இந்திய சினிமாவின் முக்கிய படமாக இருக்கும் – இயக்குநர் சுசீந்திரன் நம்பிக்கை

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘வள்ளி மயில்’. இப்படத்தில் பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தினை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். 80-களின் நாடகக்கலையை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் சுசீந்திரன் கூறுகையில், ‘இந்த படத்தின் கதையை நான்கு வருடமாக நான் எழுதி வருகிறேன். இந்த படம் நிச்சயமாக இந்திய சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும். இது எல்லோரும் எளிதில் ரிலேட் செய்துகொள்ளும் படமாக இருக்கும். இந்த படம் நிறைய உழைப்பை வாங்கியுள்ளது. வள்ளி மயில் கதாபாத்திரத்தில் ஃபரியா நடிக்கிறார். அவர் தான் இந்த படத்தின் உயிர். இது எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. எனக்கு இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு நல்ல படைப்பாக இது இருக்கும்’ என்றார்.