வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் என்றால் அது வெற்றிமாறன் தான். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

இவர் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.