Tamilசினிமா

வெப் தொடரில் நடிக்கும் நடிகை தன்யா ஹோப்

தடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தன்யா ஹோப். இப்படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தாராள பிரபு படத்திலும், சந்தானத்திற்கு ஜோடியாக கிக் படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் தற்போது வெப்பன் திரைப்படம் வெளியாக உள்ளது.

திரைப்படங்களில் நடித்து வந்த தான்யா ஹோப் தற்போது ‘லேபிள்’ என்னும் வெப் தொடரில் நடித்திருக்கிறார். ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த வெப் தொடரை அருண்ராஜா காமராஜ் எழுதி இயக்கி உள்ளார். மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

இதன் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த வெப் தொடர் விரைவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.