விஸ்டன் வெளியிட்ட சிறந்த டி20 அணி – இந்திய வீரர்கள் இருவருக்கு இடம்
‘கிரிக்கெட் வீரர்களின் பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் இந்த 10 ஆண்டுகளில் (2010 முதல் 2019 வரை) சிறந்த டி20 கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளது. இதில் எம்எஸ் டோனிக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த 10 ஆண்டுகளில் 897 போட்டிகளில் நடைபெற்றுள்ளன. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 578 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 293 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டள்ளார். மேலும் தொடக்க பேட்ஸ்மேனாக இடம் பிடித்துள்ளார். இவருடன் நியூசிலாந்தை சேர்ந்த கொலின் முன்றோவை மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனாக தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் ரன் குவிக்கும் மெஷினாக திகழும் விராட் கோலிக்கு 3-வது இடத்தை கொடுத்துள்ளது. அதேபோல் சிறந்த டெத் ஓவர் பந்து வீச்சாளரான பும்ராவுக்கும் இடம் கொடுத்துள்ளது.
விஸ்டன் அறிவித்துள்ள அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), 2. கொலின் முன்றோ, 3. விராட் கோலி, 4. ஷான் வாட்சன், 5. மேக்ஸ்வெல், 6. ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), 7. முகமது நபி, 8. டேவிட் வில்லே, 9. ரஷித் கான், 10. பும்ரா, 11, லசித் மலிங்கா.