விஷம் கொடுத்து நித்யானந்தாவை கொலை செய்ய ரகசிய திட்டம்?

கைலாசாவில் வசிப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் பிரபல சாமியார் நித்தியானந்தா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவர் சிகிச்சை பெறுவதற்காக இலங்கை அரசின் உதவியை நாடி உள்ளார். சிகிச்சைக்கு தேவையான அனைத்து நவீன எந்திரங்களையும் தனது சொந்த செலவிலேயே வாங்கி கொள்வதாகவும் அவர் இலங்கை அரசிடம் பேச்சு நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் நித்தியானந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிக அளவு தியானம் செய்ததால் அவர் உடல் பாதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால் பின்னர் வந்த தகவல்கள் அவர் முறைகேடான செயல்களில் ஈடுபட்டதால் நோய்வாய் பட்டதாக கூறப்பட்டது. தற்போது நித்தியானந்தாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. நித்தியானந்தாவுக்கு உலகம் முழுக்க சொத்துக்கள் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சில ஆயிரம் கோடி சொத்துக்கள் அவரது மடங்களுக்கு சொந்தமாக உள்ளது.

இந்த சொத்துக்களை கைப்பற்ற அவரது சிஷ்யைகளிடம் கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சிஷ்யைகளில் ஒருவர்தான் நித்தியானந்தாவுக்கு ரகசியமாக விஷம் கொடுத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது நித்தியானந்தாவிடம் சீடர்களாக இருப்பவர்கள் 3 குழுக்களாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் நித்தியானந்தா உயிருக்கு ஆபத்து என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.