விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட நடிகை பூஜா ஹெக்டேவுக்கு குவியும் பாராட்டுகள்

கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தளபதி 65 பட நடிகை பூஜா ஹெக்டே 15 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு மீண்டு வந்துள்ளார்.

பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பின்பற்றிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி கூறியுள்ளார். குறிப்பாக PULSE OXI மீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து ஒரு எளிய செயல்முறை விளக்கமும் அதில் கொடுத்துள்ளார். பூஜா ஹெக்டேவின் இந்த பதிவு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதால் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.