விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்!

சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்த சில ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்திருக்கிறது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018), கேலக்ஸி ஏ7 (2018) மற்றும் கேலக்ஸி ஜெ6 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நான்கு கேமரா சென்சார் கொண்ட கேலக்ஸி ஏ9 மற்றும் மூன்று கேமரா கொண்ட கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன்களின் விலையில் ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் ரூ.23,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகமான கேலக்ஸி ஏ7 இதுவரை ரூ.5000 விலை குறைக்கப்பட்டுள்ளது. ரூ.13,990 விலையில் அறிமுகமான கேலக்ஸி ஜெ6 (3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) ஸ்மார்ட்போனின் விலை ரூ.3500 குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,500 வரை குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

– சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 8 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.36,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

– சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.33,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

– சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 6 ஜி.பி. + 128 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.22,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

– சாம்சங் கேலக்ஸி ஏ7 (2018) 4 ஜி.பி. + 64 ஜி.பி. மாடல் விலை ரூ.3000 குறைக்கப்பட்டு ரூ.18,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

– சாம்சங் கேலக்ஸி ஜெ6 4 ஜி.பி. + 64 ஜி.பி. மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.11,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

– சாம்சங் கேலக்ஸி ஜெ6 3 ஜி.பி. + 32 ஜி.பி. மாடல் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.10,490 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் பயனர்கள் ல்மார்ட்போன்களை புதிய விலையில் வாங்கிட முடியும்.

சாம்சங் நிறுவனத்தின் அன்பேக்டு 2019 விழா அடுத்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், சாம்சங் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *