விம்பிள்டன் டென்னிஸ் – ரபேல் நடால் வெற்றி, செரீனா வில்லியம்ஸ் தோல்வி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் மிக உயர்ந்ததாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர், ரபேல் நடால் – அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடாலுக்கு, பிரான்சிஸ்கோ கடும் சவாலாக திகழ்ந்தார். இறுதியில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் வீராங்கனை ஹார்மனி டானை, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார்.

40 வயதான செரீனா காயம் காரணமாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்றார். இந்த போட்டியில் 7-5 1-6 7-6 (10-7) என்ற செட்கணக்கில் ஹார்மனி டான் வெற்றி பெற்றார்.