விம்பிள்டன் டென்னிஸ் – மகளிர் பிரிவில் ஹாலெப், ரிபாகினா காலியிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ரோமானியா நாட்டின் சிமோனா ஹாலெப், ஸ்பெயின் வீராங்கனையான பவுலா படோசாவுடன் மோதினார்.

இதில், 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஹாலெப் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, குரோஷியாவின் பெட்ரா மார்டிக்குடன் மோதினார். இதில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்ற ரிபாகினா காலிறுதிக்கு முன்னேறினார்.