விம்பிள்டன் டென்னிஸ் – நடால், கிர்கியோஸ் காலியிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், நெதர்லாந்தின் வான் டெ சாண்ட்சல்புடன் மோதினார்.

இதில் 6-4, 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமாவுடன் மோதினார். இதில் 4-6, 6-4, 7-6, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் கிர்கியோஸ்.