விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு – மறுக்கும் விஜய் தரப்பு

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் அனைவரையும் கவர்ந்து பல சாதனைகளை முறியடித்தது.

சமீபத்தில் ஹைதராபாத் படப்பிடிப்பிலிருந்த நடிகர் விஜய்யை பிரஷாந்த் கிஷோர் சந்தித்தாகவும், ஒன்றரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், விஜய் தரப்பில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றும், சந்தித்ததாக வந்த தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது.