விஜய் படத்தில் நடிக்கும் பிக் பாஸ் கவின்

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார். கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதுதவிர வி.டி.வி கணேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளாராம்.

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.