விஜய் தேவரகொண்டாவின் புது படம் கைவிடப்பட்டது

‘டியர் காம்ரேட்’ படத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா அடுத்ததாக ‘ஹீரோ’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனந்த் ‘டியர் காம்ரேட்’ படத்தைப்போல் இப்படமும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அண்ணாமலை இயக்கத்தில் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கி நடைபெற்றது. பைக் ரேஸ் தொடர்பான கதை என்பதால் இந்த படத்திற்காக விஜய் தேவரகொண்டா பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் திடீரென இந்தப் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பிற்காக பெருமளவு பொருட்செலவில் படமாக்கப்பட்ட காட்சிகள் திருப்திகரமாக அமையாததால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *