விஜய் சைக்கிளில் வந்து வாக்களிக்க இது தான் காரணமா?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிவகுமார், கார்த்தி ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்.

இதையடுத்து நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சைக்கிளில் வந்தார். விஜய் சைக்கிளில் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது.

பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக சொல்லியிருக்கிறார் என்று சமூகவலைத்தளத்தில் பேசப்பட்டது. இதனால், சைக்கிளில் வந்த நடிகர் விஜய் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்.