விஜய் இல்லாமல் ‘துப்பாக்கி 2’ எடுக்க முடிவு செய்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்த படம் ‘துப்பாக்கி’. கடந்த 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி 2-ம் பாகத்திலும் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை முருகதாஸ் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை.

தற்போது உருவாகி வரும் நடிகர் விஜய்யின் 65-வது படத்தை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை விஜய்க்கு திருப்தியாக இல்லாததால் முருகதாஸ் இப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் நெல்சன் திலீப்குமார் ஒப்பந்தமானார். இப்படத்துக்கு ‘பீஸ்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.