விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஹன்சிகா

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

தற்போது பிசியான நடிகராக வலம்வரும் விஜய் ஆண்டனி, அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் ஆண்டனி. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் ‘மஹா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.