விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும் தேதி பற்ற தகவல் வெளியானது

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு
ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட்
திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். ‘தளபதி 66’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும்
தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘தளபதி 66’ லுக் டெஸ்ட் ஷூட் சில நாட்களுக்கு முன்பு முடிந்துள்ளதாகவும், இந்த வாரம் ஒரு சிறிய ஷெட்யூல் அமைத்து
ரெகுலர் ஷூட் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.