விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் வசூல் சரிவு

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்த திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்தார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருந்தார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படம் முதல் நாளில் ரூ.9.28 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இரண்டாவது நாள் எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாக ரூ.2.56 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்ரா திரைப்படத்தின் நீளம் காரணமாக 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.