’வலிமை’ பர்ஸ்ட் லுக் வெளியாவதில் சிக்கல் – தயாரிப்பாளர் அறிவிப்பு

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார்.

வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.