’வலிமை’ பட தயாரிப்பாளர்களுக்கு பாலபிஷேகம் செய்த அஜித் ரசிகர்கள்

அஜித், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் நடனம் ஆடியும் கட்-அவுட் வைத்தும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த தயாரிப்பாளர் போனி கபூரை ரசிகர்கள் பாலபிஷேகத்துடன் வரவேற்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாகும் அஜித் படம் என்பதால் ரசிகர்கள் அவர்களுடைய சந்தோஷத்தை விதவிதமாக வெளிப்படுத்திவருகின்றனர்.

போனி கபூரை பாலபிஷேகத்துடன் வரவேற்திருப்பது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.