Tamilசினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா தரப்பு

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன.

இதனிடையே, நடிகை சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியான, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும், இதற்காக அவருக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில், நடிகை சமந்தா தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர் மீண்டும் வெப் தொடரில் நடிக்க உள்ளதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை, அது வெறும் வதந்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போதைக்கு படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக சமந்தாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.