வங்காளதேச கிரிக்கெட் அணி கேப்டன் மக்முதுல்லாவுக்கு கொரோனா பாதிப்பு

வங்காளதேச 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மக்முதுல்லா, வருகிற 14-ந்தேதி தொடங்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) பிளே-ஆப் சுற்றில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக பங்கேற்க இருந்தார். பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்பாக இரண்டு முறை நடத்தப்பட்ட கொரோனா மருத்துவ பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். பி.எஸ்.எல். போட்டியில் இருந்தும் விலகியுள்ளார்.

எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், சீக்கிரம் குணமடைய அனைவரும் தனக்காக பிரார்த்திக்கும்படியும் 34 வயதான மக்முதுல்லா கேட்டுக்கொண்டுள்ளார்.