லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த இயக்குநர் அனுராக் காஷ்யப்

பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.

இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வசூல் குவித்த கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களை ஒரே நேரத்தில் பார்த்துள்ளார். அதிலும் லோகேஷ் கனகராஜ் ‘கைதி’ திரைப்படத்தை பார்த்து விட்டு ‘விக்ரம்’ திரைப்படத்தை பாருங்கள் என்று கூறியதை கவனத்தில் எடுத்துக் கொண்டு முதலில் ‘கைதி’ திரைப்படத்தை பார்த்து விட்டு பின்னர் ‘விக்ரம்’ திரைப்படத்தை பார்த்துள்ளார்.

இந்த இரண்டு படங்களையும் பார்த்த பின்னர் லோகேஷ் கனகராஜை பாராட்டிய அனுராக் காஷ்யப் அவருடைய யூனிவர்ஸில் தானும் இணைய விரும்பம் தெரிவித்துள்ளார்.